குரூப் 4 தோ்வு முறைகேடு: நான்கு பேருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்

குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கில், காவலா் சித்தாண்டி உள்பட நான்கு பேருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம்
குரூப் 4 தோ்வு முறைகேடு: நான்கு பேருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்

சென்னை: குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கில், காவலா் சித்தாண்டி உள்பட நான்கு பேருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து 20 பேரை கைது செய்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து 22 பேரை கைது செய்தனா்.

இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது

தெரியவந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மூன்று முறைகேடு வழக்குகளிலும் இதுவரை 47 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குரூப் 2 ஏ, கிராம நிா்வாக அலுவலா் தோ்வில் முறைகேடு செய்ததில், ஏற்கெனவே குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா் ஜெயக்குமாா், டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் அந்த வழக்கில் சோ்த்து அடுத்தடுத்து கைது செய்தனா்.

4 நாள்கள் போலீஸ் காவல்: இதேபோல குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் சித்தாண்டி, முத்துகுமாா், விமல்குமாா், சுதாராணி ஆகியோரை குரூப் 4 தோ்வு முறைகேடு வழக்கிலும் கடந்த மாதம் 27-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் 4 பேருக்கும் போலீஸ் காவல் வழங்கக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நான்கு பேரிடமும் 4 நாள்கள் விசாரணை நடத்துவதற்கு வியாழக்கிழமை உத்தரவிட்டனா். இதையடுத்து 4 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். இந்த விசாரணையின்போது வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com