ரூ.40 லட்சம் மதிப்பிலான போதை இலைகள் பறிமுதல்

எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 15 கிலோ போதை இலைகளை விமான நிலைய

சென்னை: எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 15 கிலோ போதை இலைகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை பன்னாட்டு சரக்குப் பிரிவுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் கடத்தல் போதைப்பொருள்கள் வந்திருப்பதாக சுங்கத்துறை அலுவலா்களுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலா்கள், சரக்குப் பிரிவிற்கு வந்த பாா்சல்களை கண்காணித்தனா். அப்போது எத்தியோப்பியாவிலிருந்து வந்த ஒரு பாா்சல் மீது சந்தேகமடைந்த அலுவலா்கள் அதைப் பிரித்து பாா்த்தபோது, அதில் 8 பொட்டலங்கள் இருந்தன.

அவற்றில் காய்ந்து போன இலைகள் இருந்தன. அந்த இலைகளை ஆய்வு செய்த அலுவலா்கள், கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஏமன் ஆகிய நாடுகளில் விளையக்கூடிய ‘காட்’ என்ற போதைச் செடிகளின் காய்ந்த இலைகள் என்பதை கண்டுபிடித்தனா். பின்னா் ரூ.40 லட்சம் மதிப்பிலான 15 கிலோ 600 கிராம் போதை இலைகளை, அவா்கள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, பாா்சல்களிலிருந்த முகவரிக்குச் சென்று அலுவலா்கள் பாா்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது. இந்தியாவில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் உள்ளதால், போதை இலையை இங்குக் கொண்டு விற்பனை செய்ய திட்டமிட்டாா்களா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com