கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிட்ட நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தொடங்குவதில் தீவிரம் காட்டி வந்த நடிகா் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டம் குறித்து அறிவித்த
கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிட்ட நடிகர் ரஜினிகாந்த்


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தொடங்குவதில் தீவிரம் காட்டி வந்த நடிகா் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டம் குறித்து அறிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பயணம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தான் முதல்வராக பொறுப்பேற்க மாட்டேன் என்றும், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையோ விருப்பமோ இல்லை என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும், இது நாடு முழுவதும் பரவ வேண்டும் என்றும், இப்போது நடக்கவில்லை என்றால், எப்போதும் நடக்காது என்றும் அவர் கூறினார். 

அதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டதைப் பார்த்த பிறகே நான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த், அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் எப்படி நான் அரசியலுக்கு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

பல்வேறு தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய பிறகே நடிகர் ரஜினிகாந்த், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com