கும்மிடிப்பூண்டி ஸ்ரீ ஏகவள்ளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஏகவள்ளியம்மன் ஆலய மகா
கும்மிடிப்பூண்டி ஸ்ரீ ஏகவள்ளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஏகவள்ளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியில் அருள்மிகு ஏகவள்ளி அம்மன் ஆலயம் அப்பகுதி மக்களால் சுமார் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பிப்ரவரி-26ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.

தொடர்ந்து புதன்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பிரார்த்தனை, புன்யாஹவாசனம், மஹாசங்கல்பம், க்ரஹபிரீதி, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை,தனபூஜை, பூர்ணாஹுதி,தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

புதன்கிழமை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தணம், கும்பலங்காரம், பாலாலயத்தில் கலாகர்ஷனம் கும்பங்கள், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, வேதிகார்சனை, விசேஷ ஹோமம், பூர்ணாஹூதி, வேத உபசாரம், தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மிருத்சங்கிரஹணம்,வேதிகார்சனை, விசேஷ திரவிய ஹோமம், யந்திர பிம்ப பிரதிஷ்டை, பூர்ணாஹுதி, வேத உபசாரம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

தொடர்ந்து கும்பாபிஷேகம் தினமான வெள்ளிக்கிழமை கால யாக பூஜை, வேதிகார்சனை, விசேஷ திரவிய ஹோமம், அஷ்டபந்தனம், சாற்றுதல் தத்துவார்ச்சனை, தத்துவ ஹோமம், நாடி சந்தனம், ஸ்பரிஷாஹிதி, விசேஷ உபகாரம், தீபாரதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம் தினமான வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை,  ஹோமம், மஹாபூர்ணாஹுதி,வேவேத உபசாரம், தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் ஆலயத்தை வலம் வந்தது. தொடர்ந்து புரோகிதர்கள்  வேத மந்திரங்கள் முழங்க ஏகவள்ளி அம்மன், சப்த கன்னிகைகள், ஸ்ரீ தொம்பரை ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின்னர் தீர்த்த பிரசாத விநியோகம், அலங்காரம், மாங்கல்ய தாரணம், அன்னதானம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார்,  முன்னாள் மாவட்ட குழு தலைவர் ரவிச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.சேகர், பெரியஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன், பெரியஓபுளாபுரம்  ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.கே.மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் குணசேகர், தொழிலதிபர் தீர்த்தலிங்கம் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஏகவள்ளியம்மன் ஆலய அறக்கட்டளை தலைவர் ஆர்.லோகநாதன், துணைத் தலைவர் ஏ.வேதாச்சலம், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் இ.கோபால் உள்ளிட்டோர்  முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com