சபரிமலையில் பங்குனி மாத பூஜைகள் துவக்கம்: பக்தர்கள் தீவிர சோதனை

சபரிமலையில் நடை திறந்த முதல் நாளிலேயே கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை
சபரிமலையில் பங்குனி மாத பூஜைகள் துவக்கம்: பக்தர்கள் தீவிர சோதனை

சபரிமலையில் நடை திறந்த முதல் நாளிலேயே கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக சனிக்கிழமை பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பகலில் நடை அடைத்து மாலை நடைதிறந்த போது சபரிமலையில் மிகக்குறைந்த பக்தர்கள் மட்டுமே இருந்தனர்.

சபரிமலைக்கு மாத பூஜைக்கு வரும் பக்தர்கள் பம்பை வழியே சபரிமலை செல்லமுடியும். சபரிமலை வந்த பக்தர்களுக்கு பம்பையில் அகச்சிவப்பு வெப்பமானி சோதனை நடத்தியே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் பங்குனி மாதாந்திர பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பம்பையில் அகச்சிவப்பு வெப்பமானியுடன் பரிசோதிக்கப்பட்டுக் காய்ச்சல் இருக்கும் பக்தர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். காய்ச்சல் உறுதி செய்யப்படும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கமாட்டார்கள். காய்ச்சல் உள்ளவர்கள் பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் மற்றும் டி.எஸ்.ஓ.க்கு தெரிவிக்கப்படும். தனிமைப்படுத்தலுக்குள் நுழைவோரின் பரிசோதனை விசாரணை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்.

அகச்சிவப்பு வெப்பமானியின் ஆய்வு மூன்று, நான்கு சுகாதாரத்துறை ஆய்வாளர்களால் பம்பையில் உள்ள மெட்டல் டிடெக்டர் சோதனை கூடம் அருகே சனிக்கிழமை 1400 பேருக்கு நடத்தப்பட்டது.  அவர்களில்  கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. நிபுணர் பரிசோதனைக்காக அவர் பத்தனம்திட்டா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சபரிமலை பம்பை நிலக்கல் பிரைமரி மருத்துவமனைகளில் நேற்று 80 பேர் சிகிச்சை பெற்றனர்.

உலக பிரசித்திபெற்ற சபரிமலையில் பங்குனி மாத  பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் திருநடை திறந்த நிலையில் சனிக்கிழமை முதல் அபிஷேகப்பிரியன் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் துவங்கியது. அதிகாலை நடை திறந்த பின் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். இருமுடி செலுத்தி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து கூட்டமில்லாததால் நீண்ட நேரம் தரிசனம் செய்தனர். காலை 7 மணிக்கு உஜ பூஜை வழிபாடு நடந்தது.

மார்ச்18 வரை காலை 11.30 மணி வரை  நெய் அபிஷேகம்  மட்டும் நடைபெறும். அஷ்டாபிஷேகம் புஷ்பாஞ்சலி உதயஸ்தமன பூஜை படிபூஜை போன்ற முக்கிய வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களில் வந்த பக்தர்களே பம்பை வரமுடிந்தது. பத்தனம்திட்டா எருமேலி கோட்டயத்திலிருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்து வசதி இல்லாமல் வெளிமாநில பக்தர்கள் கஷ்டப்பட்டு வாடகை வாகனம் மூலம் பம்பை வந்தனர். உணவு விடுதிகளில் உணவு இல்லாமல் பெரும் கஷ்டப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com