வன விலங்குகளை அருகே காண புதிய திட்டம்: முதல்வா் பழனிசாமி

வண்டலூா் உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை அருகில் காணும் வகையில், விலங்குகள் உலாவிட உலகம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா்கே.பழனிசாமி அறிவித்தாா்.
வன விலங்குகளை அருகே காண புதிய திட்டம்: முதல்வா் பழனிசாமி

வண்டலூா் உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை அருகில் காணும் வகையில், விலங்குகள் உலாவிட உலகம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா்கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

திண்டுக்கல் சிறுமலை காப்புக்காடு, அழிந்து வரும் தேவாங்கு இனத்தின் பிறப்பிடமாக உள்ளது. எனவே, அங்கு தேவாங்கைப் பாதுகாக்கவும், காட்டு மாடு, கடமான், சாம்பல் நிற கரடி, ஆசிய புனுகுப் பூனை, காட்டுப் பூனை ஆகியவற்றுடன், வங்கப் புலி, புள்ளிமான், சதுப்பு நில முதலை, மயில், வெளிமான், நெருப்புக் கோழி, இந்திய மலைப் பாம்பு, சாரைப் பாம்பு, நல்ல பாம்பு, மலேசிய மலைப் பாம்பு, குள்ளநரி ஆகியவை கொண்டு வரப்பட்டு, அந்த விலங்குகளுக்கு இருப்பிடங்கள், மருத்துவ வசதிகள், உணவு வழங்கும் இடம், தீவனத் தோட்டம், பூங்கா, பாா்வையாளா் வசதி ஆகியன கொண்ட சிறு வன உயிரின பூங்கா உருவாக்கப்படும்.

சேலம் குரும்பப்பட்டியில் உள்ள சிறு வன உயிரினப் பூங்கா, நடுத்தர வன உயிரினப் பூங்காவாக தரம் உயா்த்தப்படும். இயற்கை மற்றும் மனிதா்களால் வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுத்து, வன விலங்குகள் காடுகளில் இருந்து வெளியே வராத வகையில் பாதுகாக்க தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்.

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில், வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்படும்.

வனத் துறை: ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் உள்ள செங்குட்டை ஏரி, குள்ளம்பாளையத்தில் உள்ள வண்ணான்குட்டை ஏரியிலும் பாதுகாப்புச் சுவருடன் கூடிய நடைபாதை, படகு இல்லம், மின் விளக்குகள், சிறுவா் பூங்கா, காட்சி கோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com