பவானி அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து: 11 பெண்கள் உள்பட 18 பயணிகள் காயம்

பவானி அருகே தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழந்ததில், 11 பெண்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.
பவானி அருகே பேருந்து விபத்து
பவானி அருகே பேருந்து விபத்து

பவானி: பவானி அருகே தனியார் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழந்ததில், 11 பெண்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து பவானிக்கு  புதன் காலை புறப்பட்டது. இப்பேருந்தை அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்த பழனி மகன் சக்திவேல் (26) ஓட்டிச் சென்றார். நடத்துனராக நெருஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (25) உடன் சென்றார். ஒலகடம் நால்ரோட்டை அடுத்த குட்டைமேடு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த ஒலகடம், தாளபாளையத்தை சேர்ந்த கண்ணாயாள் (60), பெரியசாமி (65), தேவி (36), சுந்தரம்மாள் (65), அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் (64), சென்னம்பட்டியைச் சேர்ந்த அப்புசாமி (47), குட்டைமேட்டைச் சேர்ந்த பிரேமா (42), பார்வதி (55), பாப்பா (48), சேலம் மகுடஞ்சாவடி மகாலிங்கம் (67), வெள்ளோடு குட்டைபாளையத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (40), சேலம் காக்காபாளையத்தைச் சேர்ந்த மணி (49), ஒலகடத்தைச் சேர்ந்த சுப்பையா (70), ப்ரீத்தி (18), அந்தியூரைச் சேர்ந்த கவிதா (42), தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (70) ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, வெள்ளிதிருப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com