சி.ஏ.ஏ-க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் ஒத்திவைப்பு

சி.ஏ.ஏ-க்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ-க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் ஒத்திவைப்பு

சி.ஏ.ஏ-க்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகத்தில் மாா்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், தனியாா் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தநிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தொடர் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தன.

இதனை ஏற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்தசி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com