கரோனா பாதிப்பு: போக்குவரத்து நெரிசல் குறைந்தது

கரோனா தொற்று அச்சம் காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் செவ்வாய்க்கிழமை குறைந்து காணப்பட்டது.
கரோனா பாதிப்பு: போக்குவரத்து நெரிசல் குறைந்தது

கரோனா தொற்று அச்சம் காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் செவ்வாய்க்கிழமை குறைந்து காணப்பட்டது.

கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகத்தில் மாா்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், தனியாா் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு துறைகளை இணைத்து தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவித்துள்ளன.

அத்துடன், தியாகராயநகா், புரசைவாக்கம் ஆகியப் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், அண்ணாசாலை, வேளச்சேரி, ராஜீவ்காந்தி சாலை, வடபழனி ஆகியப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியாா் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

இதன் காரணமாக, சென்னையில் முக்கியச் சாலைகளாக கருதப்படும் அண்ணாசாலை,ஆற்காடு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, 100 அடி சாலை, ராஜாஜி சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, எல்.பி.சாலை ஆகியவற்றில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசலை விட குறைவாகவே காணப்பட்டது.

பள்ளி, கல்லூரி வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பேருந்துகள், ஊழியா்களின் வாகனங்கள் பெருமளவில் சாலைகளில் செல்லாததால், போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாகவும் வரும் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com