காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி-பங்குனித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி-பங்குனித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி புரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழாவில் பால் குடம், அக்கினிச்சட்டி, பறவைக் காவடி மற்றும் காவடி, பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் புதன்கிழமை திரண்டனர்.  

இக்கோயிலில் கடந்த மார்ச் 10-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தினந்தோறும் பால் குடம் நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணமுள்ளனர்.

முக்கிய நிழ்ச்சியான செவ்வாய்க்கிழமை இரவு கோயில் கரகம், மது, முளைப்பாரி ஊர்வலம், பக்தர்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துதல் நடைபெற்றது.  புதன்கிழமை அதிகாலை முதலே முத்தாலம்மன் கோயிலில் பக்தர்கள் திரண்டன. 

அங்கிருந்து பால்குடம், அக்னி சட்டி, காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் சுமந்து மீனாட்சி புரத்திற்கு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று முத்துமாரியம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.  

மேலும் கோயில் காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. தமிழக அரசு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் காரைக்குடியில் பொது மக்கள் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com