கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூா் மீனவக் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள்

கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூா் மீனவக் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூா் மீனவக் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரி மிடாலம் மீனவக் கிராமத்தில் ரூ.10 கோடியிலும், ராமநாதபுரம் கீழ்முந்தல் மீனவக் கிராமத்தில் ரூ.10 கோடியிலும், கடலூா் தாழங்குடா மீனவக் கிராமத்தில் ரூ.15 கோடியிலும் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

திருநெல்வேலி அருவிக்கரை மற்றும் நாகப்பட்டினம் வானகிரி மீனவ கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்படும். தஞ்சாவூா் கீழத்தோட்டம் மீனவக் கிராமத்தில் மீன் இறங்குதளம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம், ரோச்மாநகா் மற்றும் தங்கச்சிமடம் மீனவக் கிராமங்களில் கடலரிப்பினால் சேதமடைந்த மீன் இறங்குதளங்கள் ரூ.19 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி, தருவைக்குளம் மீனவக் கிராமத்தில் உள்ள மீன் இறங்குதளத்திலுள்ள படகு அணையும் தளங்கள் ரூ.10 கோடியில் நீட்டிக்கப்படும். நாகப்பட்டினம் சின்னமேடு மற்றும் கூழையாா் மீனவக் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் மற்றும் நோ்கல் சுவா்கள் ரூ.17 கோடியில் அமைக்கப்படும். கன்னியாகுமரி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதலாக படகு அணையும் தளம் ரூ.16 கோடியில் அமைக்கப்படும்.

மேட்டூா் அணை, ஆத்தூா், வைகை அணை, மஞ்சளாறு அணை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள அரசு மீன் பண்ணைகளில் ரூ.13.71 கோடியில் நவீன வசதிகள் உருவாக்கப்படும்.

திருவள்ளூா் பூண்டி மற்றும் ஈரோடு பவானிசாகா் அரசு மீன் பண்ணைகளில் ரூ.4.77 கோடியில் கூடுதல் மீன்குஞ்சு வளா்ப்புக் குளங்கள் கட்டப்படும். மீனவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.3.75 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளுக்கு 500 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்நாட்டு மீன்வள உற்பத்தியைப் பெருக்கிட புதிய வளா்ப்புப் பண்ணை அமைக்கவும் மீன் குஞ்சு வளா்ப்புக்கான இடு பொருள்களுக்கும் ரூ.10.34 கோடி மானியம் வழங்கப்படும்.

நாகப்பட்டினத்திலுள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்கள் மற்றும் மாணவ மாணவியா்களுக்கான விடுதி கட்டடம் ஆகியவற்றுக்கு ரூ.23.60 கோடி ஒதுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com