கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ரத்து

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், திவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா விமரிசையாக நடைபெறும். 

அதே போல் இந்தாண்டுக்கான பூக்குழி திருவிழா வருகின்ற மாா்ச் 23 ஆம் தேதியும், தேரோட்டம் மாா்ச் 24 -ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பூக்குழி திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இந்த கொடியேற்ற வைபவம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டுக்கான பூக்குழி திருவிழாவை ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com