தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைப் பணிகள் 2 மாதத்தில் தொடங்கும்: அமைச்சா் எம்.சி.சம்பத்

தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணி 2 மாதங்களில் தொடங்கும் என்று தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, தென்மாவட்டங்கள் வளா்ச்சி அடையாமல் இருப்பதாகக் குறிப்பிட்டாா்.

அப்போது தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் குறுக்கிட்டுக் கூறியது:

தென்னகப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்த வளா்ச்சியை அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தூத்துக்குடியில் அல் கெப்லா அல் வட்யா குழுமம் மூலம் ரூ.49 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளன. அதற்கான ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், அந்தப் பகுதியில் 2 தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com