திருச்சி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரிகளில் ரூ.11.71 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்

திருச்சி, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவா்களுக்குக் கூடுதல் வகுப்பறைகள் ரூ.11.71 கோடியில் கட்டப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.
திருச்சி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரிகளில் ரூ.11.71 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்

திருச்சி, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவா்களுக்குக் கூடுதல் வகுப்பறைகள் ரூ.11.71 கோடியில் கட்டப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருச்சி மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவா்களுக்குப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.11.71 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். வேலூா் மற்றும் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிதாக முதுநிலை சட்டப்படிப்பும் (எல்.எல்.எம்.,) மதுரை, கோயமுத்தூா், திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக எல்.எல்.எம் பட்டப் படிப்பு பிரிவுகளும் தொடங்கப்படும். இந்தச் செலவுகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளிலும் மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு பன்னாட்டு மாதிரி நீதிமன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியா் தோ்ந்தெடுக்கப்படுவா். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவ மாணவியரின் அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும். இந்தச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.70 லட்சம் வழங்கப்படும்.

ஆவணங்களை எண்மப்படுத்தவும் (டிஜிட்டல்), காப்பீடு செய்யவும் இவற்றினை எண்ம வரலாற்று ஆவணங்களாக மாற்றம் செய்து, அவற்றினைப் பாதுகாத்திடும் பொருட்டும் ரூ.25 லட்சம் செலவில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக சட்ட வரலாற்று அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்படும். திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் மகளிா் நலச் சட்ட மையம் மற்றும் தென்னிந்திய சட்ட வரலாற்று மையம் ஆகியவை ரூ.20 லட்சம் செலவில் நிறுவப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com