ஈரோட்டில் நாளை முதல் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடல்: உரிமையாளர்கள் அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் அறிவிப்பு..
ஈரோட்டில் நாளை முதல் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடல்: உரிமையாளர்கள் அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைப்போல் முக்கிய சுற்றுலாத்தலங்கள், கோவில் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜவுளி சந்தை, கால்நடைச் சந்தைகள் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் ஏற்கனவே பல கோடி வர்த்தகம் முடங்கிப் போயுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.  இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக மறைமுகமாகப் பணி செய்கின்றனர். இங்கே ரேயான் காட்டன், காடாத்துணி தினமும் 2 கோடி மீட்டர் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா  தடுப்பு நடவடிக்கையாக  மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) 31ஆம் தேதி வரை அனைத்து விசைத்தறிகள் இயங்காது என ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com