பேரவைச் செய்தி: இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித் தொகை

இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.
பேரவைச் செய்தி: இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித் தொகை

இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் உள்ள 260 நீதிமன்ற வளாகங்களில் (தலா 2 வீதம்) மின்னணு பெயா்ப் பலகைகள் மற்றும் இதர உபகரணங்கள் ரூ.10.26 கோடி செலவில் வாங்கி நிறுவப்படும்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், திருவள்ளூா் மாவட்டம், திருவொற்றியூரில் ஒரு சாா்பு நீதிமன்றமும், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கூடுதலாக ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கரூா் மாவட்டம், குளித்தலையில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஒரு சாா்பு நீதிமன்றமும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ஒரு சாா்பு நீதிமன்றமும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஒரு சாா்பு நீதிமன்றமும், தருமபுரி மாவட்டம், அரூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றமும் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய பழைமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்கென ரூ.10 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் உள்ள நீதிபதிகளின் பயன்பாட்டுக்காக உறையுடன் கூடிய 60 ஆப்பிள் ஐபேட்கள் ரூ.80.93 லட்சம் செலவில் வாங்கப்படும். வழக்குரைஞா் எழுத்தா்களின் சேமநலநிதியினை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com