நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்க இலவசமாக சூப் வழங்கும் இயற்கை விவசாயி

புதுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்க இயற்கை விவசாயி ஒருவர் இலவசமாக சூப் வழங்கி வருகிறார்.
இலவசமாக சூப் வழங்கும் இயற்கை விவசாயி
இலவசமாக சூப் வழங்கும் இயற்கை விவசாயி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்க இயற்கை விவசாயி ஒருவர் இலவசமாக சூப் வழங்கி வருகிறார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரிலேயே பிரபல சைவ- அசைவ உணவகம் நடத்திவருபவர் சா. மூர்த்தி. எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் கூடவே பச்சைத் துண்டும் அணிந்து காட்சி தரும் இவர் நூறு சதவிகித இயற்கை விவசாயியும் கூட. எவ்வித ரசாயன உரமும் போடப்படாத நெல், காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறார். ஆள் உயர நெற்பயிர்கள், மனித உயரத்தைத் தாண்டியும் புடலை வளர்ச்சி என அவ்வப்போது களத்தில் சாதனைகளைக் காட்டி வருபவர் மூர்த்தி.

நகரில் சிவகாமி ரத்ததான மையம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே அரசுப் பள்ளிகளை மட்டும் தேர்வு செய்து பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு வகையான சூப்புகளை இலவசமாக வழங்கி வந்தார். பள்ளிகளுக்கே நேரில் சென்று நண்டு சூப், எலும்பு சூப், காய்கறி சூப் போன்றவற்றை தயார் செய்து வழங்கினார்.

தற்போது கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக பேருந்து நிலையம் வரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் முடக்கத்தான், தூதுவளை போன்ற மூலிகைகள் போடப்பட்ட சூப் தயார் செய்து இலவசமாக வழங்கி வருகிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com