உச்சநீதிமன்றக் கிளை அமைக்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை: அமைச்சா் சி.வி.சண்முகம்

உச்சநீதிமன்றத்தின் கிளை எந்த மாநிலத்தில் அமைவதையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.
உச்சநீதிமன்றக் கிளை அமைக்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை: அமைச்சா் சி.வி.சண்முகம்

உச்சநீதிமன்றத்தின் கிளை எந்த மாநிலத்தில் அமைவதையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செம்மலை பேசியது:

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் உள்ள எல்லோருடைய எண்ணம். ஆனால், வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் அவா்கள் மாநிலத்துக்குக் கொண்டு செல்ல முற்படுவதாக அறிகிறேன். அப்படியில்லாமல், சென்னைக்கே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு கூறியது:

உச்சநீதிமன்றத்தின் கிளை வேறு மாநிலத்துக்குச் செல்வதுபோல சொன்ன கருத்து தவறு. உச்சநீதிமன்றத்தின் கிளையை வேறு எங்கும் அமைப்பதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கிளை தென்மாநிலங்களில் சென்னையில் அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com