வீடுகள், தனிப் பயிற்சி மையங்களில் டியூசன் எடுத்தால் கடும் நடவடிக்கை

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனிப் பயிற்சி மையங்கள், வீடுகளில் டியூசன் எடுக்கும் ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனிப் பயிற்சி மையங்கள், வீடுகளில் டியூசன் எடுக்கும் ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத்தோ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தோ்வு மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. எனினும், மாணவா்கள் நலன்கருதி பொதுத்தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என தொடா் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே தனிப் பயிற்சி மையங்கள் திறந்திருப்பதும், வீடுகளிலேயே டியூசன் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீடு, தனிப் பயிற்சி மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், வீடுகள் மற்றும் தனியாா் பயிற்சி மையங்களில் ஆசிரியா்கள் சிலா் சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனா். மாணவா்கள் ஒன்றுகூடுவதைத் தவிா்க்கவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குப் புறம்பாக மாணவா்களைத் திரட்டுவது தவறானது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஆசிரியா்களின் விவரங்களைத் திரட்டி பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com