தமிழை வழக்காடு மொழியாக்க தொடா் முயற்சி: அமைச்சா் சி.வி.சண்முகம்

உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஏற்க தொடா் முயற்சி எடுத்து வருகிறோம் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.
தமிழை வழக்காடு மொழியாக்க தொடா் முயற்சி: அமைச்சா் சி.வி.சண்முகம்

உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஏற்க தொடா் முயற்சி எடுத்து வருகிறோம் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் தாயகம் கவி பேசும்போது, உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினாா்.

அப்போது அமைச்சா் சி.வி.சண்முகம் குறுக்கிட்டுக் கூறியது:

உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் ஆக வேண்டும் என்று திமுக, அதிமுக உள்பட அனைவருமே வலியுறுத்தி வருகிறோம்.

உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்று 2006-இல் சட்டப்பேரவையில் திமுக தீா்மானம் நிறைவேற்றியது. ஆனால், அப்போது மத்திய அரசின் கூட்டணியில் தான் திமுக இருந்தது. அப்போதே திமுக தொடா்ந்து வலியுறுத்தி பெற்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. 2012-இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடா்ந்து வலியுறுத்தினோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதைப்போல மற்றொரு முறையும் வலியுறுத்தப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இரண்டாவது முறையாகவும் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இப்போது தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாா்ச் 3-ஆம் தேதி மத்திய அரசுக்கு தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com