மதுரையில் வெளிநாட்டுத் தொடர்பற்ற ஒருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 12 ஆனது

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது புரசைவாக்கம் இளைஞர் ஒருவர் தற்போது ராஜிவ காந்தி அரசு பொது மருத்துவமனையிலும்,  லண்டனில் இருந்து திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய ஒருவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும், மதுரையைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய ஒருவர் ராஜாஜி மருத்துவமனையிலும் தனிமையில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

இதில் மதுரையைச் சேர்ந்தவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே அவருக்கு கரோனா தோற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வெளிநாடுகள் எதற்கும் செல்லாத ஒருவருக்கு தமிழகத்தில் முதன்முறையாக பாதிப்பு  ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com