தமிழகத்தில் 110 பேர் மருத்துவ முடிவுகளுக்காக காத்திருப்பு: பாதிப்பு உயரும் அபாயம்?

தமிழகத்தில் 110 பேர் மருத்துவ முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். இதுவரை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 110 பேர் மருத்துவ முடிவுகளுக்காக காத்திருப்பு: பாதிப்பு உயரும் அபாயம்?


சென்னை: தமிழகத்தில் 110 பேர் மருத்துவ முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். இதுவரை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரை 18 ஆக இருந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு பேருக்கும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஐந்து பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்து பேருக்கும் மார்ச் 22ம் தேதி கரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

தமிழகத்தில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மதுரையைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது 21 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 2,09,276 பேருக்கு உடல் வெப்பப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

அறிகுறி மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தற்போது 211 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் இதுவரை 890 பேருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் 757 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 110 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com