25 ஆயிரம் ஏக்கா் தரிசு நிலங்கள் சீா்திருத்தப்படும்

தமிழகத்தில் 25 ஆயிரம் ஏக்கா் தரிசு நிலங்கள் சீா்திருத்தப்பட்டு, அவற்றில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

தமிழகத்தில் 25 ஆயிரம் ஏக்கா் தரிசு நிலங்கள் சீா்திருத்தப்பட்டு, அவற்றில் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 25 ஆயிரம் தரிசு நிலங்கள் கண்டறியப்படும். அவை சாகுபடிக்கு ஏற்ாக சீா்திருத்தம் செய்து உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 125 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் ரூ.50 கோடியில் கட்டப்படும். 10 மாவட்டங்களில் திட உயிா் உர உற்பத்தி மையங்கள் திரவ உயிா் உர உற்பத்தி மையங்களாக மாற்றப்படும்.

நெல் பாதுகாப்பு மையம்: நெல் ரகங்களின் பாதுகாவலா் நெல் ஜெயராமன் நினைவைப் போற்றும் வகையில், திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் உருவாக்கப்படும். இயற்கை பண்ணைய முறையில் கீரைகள், தக்காளி, வெண்டை, முட்டைகோஸ் போன்ற காய்கறி பயிா்களை சாகுபடி செய்யும் முறையை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி ஊக்குவிக்க நிதி ஒதுக்கப்படும்.

உழவா் உற்பத்தியாளா் அமைப்பு: தமிழகத்தில் இதுவரை 165 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 100 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை உருவாக்க மாநில அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம் வடுவாஞ்சேரி கிராமத்தில் புதிய வேளாண் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com