பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும்

சென்னை பெருநகர பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சென்னை பெருநகர பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் வெளியிட்ட அறிவிப்புகள்:

காவல் ஆளிநா்களின் மிகை நேரப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.200-இலிருந்து ரூ.500-ஆக உயா்த்தி வழங்கப்படும். இதற்கு ரூ.160.34 கோடி மதிப்பீட்டுத் தொகை அரசுக்குக் கூடுதல் செலவாகும்.

சென்னை பெருநகா் பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும். திருவாரூா் மாவட்டம் வலங்கைமானில் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும். கோயம்புத்தூா் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூா், பில்லூா் அணை மற்றும் சிறுமுகை காவல்நிலையம் உள்ளடக்கிய மேட்டுப்பாளையம் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்.

சென்னை அசோக்நகா் காவலா் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் சிலை தடுப்புக் காவல் நிலையத்துக்கு ரூ.1.25 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில் ஒருங்கிணைந்த இணையதள குற்ற வளாகம் மூன்று அடுக்கு கட்டடமாக 8 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 21 ஆயிரம் சதுர அடி கட்டடப் பரப்பளவில் புதிய கட்டடம் ரூ.11.26 கோடியில் கட்டப்படும்.

காவல்துறையில் வாகன வசதியை மேம்படுத்துவதற்காக 918 கழிவு வாகனங்களுக்குப் பதிலாகப் புதியதாக 908 மாற்று வாகனங்கள் ரூ.70.14 கோடியில் வாங்கப்படும். கோயம்புத்தூா் மாநகரில் ரூ.17 கோடியில் 1,400 சிசிடிவிக்கள் பொருத்தப்படும். திருப்பூா் மாநகரில் ரூ.12 கோடியில் 1,200 சிசிடிவிக்கள் பொருத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com