தஞ்சாவூர் மதுக்கூடத்தில் 2,000 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மதுக்கூடத்தில்
தஞ்சாவூர் மதுக்கூடத்தில் 2,000 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மதுக்கூடத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2,000 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதன்பேரில் கோட்டாட்சியர் வேலுமணி, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன்
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அழகர்சாமி மற்றும் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தபோது தொடர்புடைய மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த ஏறத்தாழ 2,000 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com