கரோனாவை எதிர்கொள்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும்: ஆளுநர்

கரோனாவைத் தடுக்கும் சவாலை எதிர்கொள்வதில்  தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். 

இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள தகவலில், 'மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக மக்கள் அனைவரும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். 

கரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன். கரோனாவைத் தடுக்கும் சவாலை எதிர்கொள்வதில்  தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். 

அனைவரும் தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும். 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், ஏற்கெனவே கரோனா அறிகுறி இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அதேநேரத்தில் கரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com