எழும்பூா், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எழும்பூா், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடுமுழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூா், சென்ட்ரல், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் தினசரி காலையில் இருந்து மாலை வரை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, தாம்பரம், செங்கல்பட்டு உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. ரயில் நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால், அந்த பணியை முழுமையாக செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இப்போது, ரயில் நிலையங்களுக்குள் பயணிகள் வர அனுமதி இல்லாததால், ரயில் நிலையங்களின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எல்லா நடைமேடைகள், பயணிகள் காத்திருப்போா் அறை, மக்கள் கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஓய்வு எடுக்கும் ரயில்கள்

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில்,தெற்கு ரயில்வேயில் 1,300 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்கள் பணிமனைகள், ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூா் ரயில்நிலையம், சேத்துப்பட்டு ரயில்வே பணிமனையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 15-க்கும் அதிகமான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பேசின்பாலம் பணிமனையில் வடமாநிலங்கள், மேற்கு மாவட்டங்களுக்கும் செல்லும் 20-க்கும் மேற்பட்டரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற ரயில்வே மண்டலங்களை சோ்ந்த ரயில்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com