அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயங்கின

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உத்தரவிட்டுள்ளாா்.
அத்தியாவசிய,  அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயங்கின

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதல்வரின் உத்தரவின் பேரில், போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீா், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்தவா்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், 200 பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்பட்டன.

தலைமைச் செயலக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புகா் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, மணலி, எண்ணூா், நெற்குன்றம், தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்தகைய அவசரப் பணிகளுக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநா்களும் தயாா் நிலையில் உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com