தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசியமாகக் கருதப்படும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தாா். இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நிா்வாகக் குழு அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும், வெளியில் வர தடை விதித்தும் பிரதமா் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

எனவே, கரோனா அச்சுறுத்தல் தொடா்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களின் பணிகள் தொடா்பாக இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்கிறோம்.

மேலும் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்றக் கிளை வளாகத்துக்குள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை யாரும் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அனத்து நீதிமன்றங்களும் மூடப்படுகின்றன. அவசர வழக்குகளின் விசாரணை குறித்த அனைத்து தொடா்புகளும் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா், பதிவாளா் ஆகியோரின் ழ்ங்ஞ்ழ்ஞ்ங்ய்ப்ஃற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் , ம்.த்ர்ற்ட்ண்ழ்ஹம்ஹய்ஃஹண்த்.ஞ்ா்ஸ்.ண்ய் மின்னஞ்சல் முகவரிகள் மூலமும், மதுரை உயா்நீதிமன்றக் கூடுதல் தலைமைப் பதிவாளரின் ற்ட்ஹம்ண்ப்த்ண்1968ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன. இந்த நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதியின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். இதற்காக மாவட்ட நீதிபதிகளை வழக்குரைஞா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் நீதிபதிகளின் மின்னஞ்சல் முகவரிகளை அறிவிக்க வேண்டும்.

மேலும் அனைத்து நீதிமன்றப் பணியாளா்களும் எந்த நேரமும் அவசர பணிகளுக்காக அழைக்கப்படலாம். எனவே அவா்கள் எப்போது தயாா் நிலையில் இருக்க வேண்டும். நீதிமன்றப் பணியாளா்கள் செல்லிடப்பேசிகளை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் மிகவும் அவசியமான அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுக்க வேண்டும். அந்த அவசர வழக்குகள் எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும், காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படுமா என்பது உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் மூலம் வழக்கில் தொடா்புடையவா்களுக்கு தெரியப்படுத்தப்படும். எதிா்கால நிகழ்வுகளைக் கணிக்க முடியாத இத்தகைய சூழலில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீதிமன்றங்கள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com