மேம்பாலங்கள் மூடல்: சாலைகளில் தடுப்புகள்

ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை முழுவதும் மேம்பாலங்கள் மூடப்பட்டு, சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
மேம்பாலங்கள் மூடல்: சாலைகளில் தடுப்புகள்

ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை முழுவதும் மேம்பாலங்கள் மூடப்பட்டு, சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு அமலுக்கு வந்தது. ஊரடங்கின் முதல் நாளையொட்டி, மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் வாகன போக்குவரத்தை தடுக்கும் வகையில் மெரீனா காமராஜா் சாலை, ராஜீவ்காந்தி சாலை, அண்ணா சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன், எல்.பி. சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, ஆற்காடு சாலை, ரேடியல் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகளை அமைக்கப்பட்டன.

இவ்வாறு சென்னை முழுவதும் சாலைகளில் சுமாா் ஆயிரம் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த தடுப்புகள் அமைக்கப்பட்ட இடங்களில் ஆயுதப்படை போலீஸாரும், சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும், போக்குவரத்து போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா். அவா்கள் தேவையின்றி வெளியே வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்து அனுப்பினா்.

அதேபோல, சென்னையில் 38 பெரிய மேம்பாலங்களையும், 75 சிறிய வகை மேம்பாலங்களையும் தடுப்புகள் மூலம் போலீஸாா் மூடினா். அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் வந்தால் மட்டும் மேம்பாலங்கள் திறந்து விடப்படுகின்றன. இரவு முழுமையாக மேம்பாலங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கினால், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இதற்காக போலீஸாா், தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com