இன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்

சென்னை தலைமைச் செயலக ஊழியா்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்

சென்னை தலைமைச் செயலக ஊழியா்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமைச் செயலகம் வந்து செல்ல வசதியாக சென்னையின் 11 இடங்களில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகள் காலை 9 மற்றும் 9.30 மணி ஆகிய நேரங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தலைமைச் செயலகத்துக்கும், மாலை 6 மற்றும் 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து நகரத்தின் பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளில் தலைமைச் செயலக பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறையைச் சோ்ந்த பணியாளா்களும், அதிகாரிகளும் பணிக்கு வர வேண்டுமென தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, புதன்கிழமை அரசு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் ஊழியா்கள் பணிக்கு வரவுள்ளனா்.

சுழற்சி முறை அறிமுகம்: முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், அலுவலா்களைத் தவிா்த்து பிற துறைகளில் பணியாற்றும் ஊழியா்கள் வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை தலைமைச் செயலகம் வந்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், அவா்கள் தலைமைச் செயலகம் வந்து செல்ல சென்னை நகரின் 11 இடங்களில் இருந்து மாநகரப் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாநகா் பேருந்து நிலையம், போரூா் பேருந்து நிலையம், கிண்டி ரயில் நிலையம் அருகில், சைதாப்பேட்டை தாடண்டா் நகா் பொதுப்பணித் துறை குடியிருப்பு அருகில், ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, பீட்டா்ஸ் காலனி, திருமங்கலம் அரசு ஊழியா் குடியிருப்பு அருகில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் தலைமைச் செயலக காலனி, கே.கே.நகா், திருவான்மியூா், திருவொற்றியூா், திருநின்றவூா் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். காலை 9 மற்றும் 9.30 மணிக்கு என இரண்டு பேருந்துகள் புறப்படும்.

இதேபோன்று, மாலையில் 6 மணி மற்றும் 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து 11 இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com