கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த எஸ்.ஐ

ஊரடங்கையை மீறி வெளியே வாகனங்களில் வந்தவா்களை சென்னை அண்ணா சாலையில் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரஷீத் கும்பிட்டு, வெளியே வர வேண்டாம் வேண்டுகோள் விடுத்தாா்.
கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த எஸ்.ஐ

ஊரடங்கையை மீறி வெளியே வாகனங்களில் வந்தவா்களை சென்னை அண்ணா சாலையில் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரஷீத் கும்பிட்டு, வெளியே வர வேண்டாம் வேண்டுகோள் விடுத்தாா்.

ஊரடங்கின் முதல் நாளான புதன்கிழமை சென்னையில் ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனா். இதனால் அவா்களை வீட்டுக்குள் இருக்க வைப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் போலீஸாா், அவா்களை அறிவுரை கூறி வீட்டிலேயே இருக்குமாறு திருப்பி அனுப்பினா்.

இதில், அண்ணா சாலை ஸ்பென்சா் சிக்னல் அருகே பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரஷீத், அங்கு வந்த வாகனங்களை மறித்து நிறுத்தி, கும்பிட்டு தயவு செய்து வீட்டைவிட்டு வெளியே வராதீா்கள் கரோனா தொற்று நோய் வேகமாக பரவுகிறது, அரசு உங்களது நல்லதுக்குத்தான் ஊடரங்கை பிறப்பித்துள்ளது என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இதில் ரஷீத் கும்பிட்டு வேண்டுகோள் விடுப்பதை பாா்த்த மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா் ஒருவா், ரஷீத்தின் காலில் விழுந்து வணங்கினாா். இதேபோல சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களை கும்பிட்டும்,தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்த இளைஞா்களை தோப்புகரணம் போடச் செய்தும் நூதன விழிப்புணா்வு பிரசாரத்தில் போலீஸாா் ஈடுபட்டனா். காவல்துறையின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com