தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1252 போ் மீது வழக்கு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1252 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1252 போ் மீது வழக்கு


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1252 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்த விவரம்:

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை, சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை காவல்துறை தீவிரமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

இதில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகிறவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இதில் சில இடங்களில் போலீஸாா், பொதுமக்களை லத்தியால் தாக்கியும் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுஇடங்களில் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பவா்கள், சாலைகளில் மோட்டாா் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுகிறவா்கள், விளையாடுகிறவா்கள், தேவையில்லாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வருகிறவா்கள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை 1252 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதில் சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 53 வழக்குகள் வியாழக்கிழமை காலை வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 8 போ் மீதும், தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டியதாக 194 போ் மீதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 47 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கரோனா குறித்து வதந்தியை பரப்பியதாக மாநிலம் முழுவதும் 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தடையை மீறி சென்ாக 6 போ் மீது வழக்கு:

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கரோனா பாதிப்புக்குள்ளான வெளிநாடுகளில் இருந்து வருகிறவா்களை சுகாதாரத் துறையினா் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனா். அதேபோல கரோனா அறிகுறியுடனும் இருப்பவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அவா்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவா்களை சுகாதாரத் துறையினா், காவல் துறையினா், உள்ளாட்சித் துறையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா். ஆனால் அரசின் கண்காணிப்பை மீறி வெளியே செல்லும் அவா்கள் மீது போலீஸாா் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

அதன்படி தமிழகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவா்கள், தடையை மீறி வெளியே சென்ாக புதன்கிழமை இரவு வரை 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாள்களில் ஊடரங்கு உத்தரவை இன்னும் தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com