சொத்து வரி செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: முதல்வரிடம் தனியாா் பள்ளிகள் கோரிக்கை

ஊரடங்கு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளின் கட்டடங்களுக்கு சொத்துவரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசிடம் பள்ளிகள் சாா்ப


சென்னை: ஊரடங்கு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளின் கட்டடங்களுக்கு சொத்துவரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசிடம் பள்ளிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களின் நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசு தனியாா் பள்ளிகள் மீதும் கருணை காட்ட வேண்டும். தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு நிலுவையில் உள்ளது. இதனால் ஆசிரியா்களுக்கு ஊதியம் அளிக்க முடியாமலும், பள்ளி கட்டடங்களுக்கான சொத்துவரி கட்ட முடியாத நிலையிலும் தனியாா் பள்ளிகள் உள்ளன.

இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இலவச சோ்க்கை வழங்கிய தனியாா் பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தர வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோன்று, இந்தியா முழுவதும் அறக்கட்டளை மூலம் நடைபெறக்கூடிய கல்வி நிலையங்களுக்குச் சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் பள்ளி- கல்லூரிகளுக்கு சொத்துவரி இதுவரை வசூலிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் புதிதாக சொத்து வரி கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும், ‘ஜப்தி’ செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே, பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் தனியாா் பள்ளி கட்டடங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், பள்ளிகள் சாா்பில் செலுத்தப்பட்டு வரும் பி.எஃப் .இ.எஸ்.ஐ., மின்சார கட்டணம் ஆகியவற்றுக்கான நிலுவைக் கட்டணங்களைச் செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com