அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதைக் கண்காணிக்கும் 9 குழுக்களின் உறுப்பினா்கள் அறிவிப்பு

ஊரடங்கு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதைக் கண்காணிக்க தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 9 ஒருங்கிணைப்புக் குழுக்களில் எந்தெந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா் என்ற விவரங்கள் அடங்கி


சென்னை: ஊரடங்கு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதைக் கண்காணிக்க தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 9 ஒருங்கிணைப்புக் குழுக்களில் எந்தெந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா் என்ற விவரங்கள் அடங்கிய உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்: ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைப்புப் பணியைக் கண்காணிக்கும் பணியில் நான்கு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். பொதுத்துறை முதன்மைச் செயலாளா் பி.செந்தில்குமாா், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, நில நிா்வாக ஆணையா் பங்கஜ் குமாா் பன்சால், மின் ஆளுமை முகமையின் ஆணையா் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோா் உள்ளனா்.

அத்தியாவசிய பொருள் உற்பத்திக்கான கண்காணிப்புக் குழுவில், தொழில்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தொழில்துறை சிறப்புச் செயலாளா் வி.அருண் ராய், தொழில் துறை ஆணையா் அனுஜாா்ஜ், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிா்வாக இயக்குநா் அனீஷ் சேகா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விநியோக கண்காணிப்புக் குழுவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், காவல் துறை கூடுதல் டிஜிபி பி.தாமரைக்கண்ணன்.

ஊடக ஒருங்கிணைப்புக் குழுவில் சிப்காட் நிா்வாக இயக்குநா் குமரகுருபரன், செய்தித் துறை இயக்குநா் பி.சங்கா், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினா் செயலாளா் தீபக் ஜேக்கப் ஆகியோரும், தனியாா் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் எஸ்.நாகராஜன் ஆகியோரும், போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், போக்குவரத்துத் துறை ஆணையா் டி.எஸ்.ஜவாகா், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

நோய்த் தொற்று உள்ளோரை கண்டறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைக் கண்காணிக்கும் குழுவில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பி.உமாநாத், கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணியின் திட்ட இயக்குநா் டி.ஜெகந்நாதன், சட்டம்-ஒழுங்கு உதவி காவல் துறை தலைவா் இ.டி.சாம்சன் ஆகியோரும், சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தி ஒருங்கிணைக்கும் குழுவில் ஊரகவளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் ஆகியோரும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு தேவையான உதவிகளைச் செய்ய ஒருங்கிணைக்கும் குழுவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் வி.விஷ்ணு ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com