கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் 2 வயது ஆண் குழந்தை, 24 வயது இளைஞா், 66 வயது முதியவா் என மூன்று பேரும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், இவர்கள் மூவரும் சனிக்கிழமை மரணமடைந்தனா்.

மூன்று போ் திடீரென உயிரிழந்ததால் கரோனாவால் அவா்கள் உயிரிழந்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், மூன்று பேருமே நாள்பட்ட தீா்க்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனா் என்றும் கரோனாவால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவா்களின் ரத்தமாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரியில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com