சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை மூட உத்தரவு

சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை மூட உத்தரவு

சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் சமூக விலகலை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதுச்சேரியில் பெரிய சூப்பர் மார்க்கெட்டில் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்காததால் அதனை தற்காலிகமாக மூட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், 'புதுச்சேரி மக்கள் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லை. சமூக விலகலுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சமூக விலகலை மக்கள் கடைபிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, புதிய பேருந்து நிலையத்தில் காய்கறிகளை இறக்கி சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் தர வேண்டும்' என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com