பால் பொருள்களை ஸ்விகி மூலமும் பெறலாம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

பால் மற்றும் பால் பொருள்களை ஸ்விகி நிறுவனம் மூலமும் பெறலாம் என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

பால் மற்றும் பால் பொருள்களை ஸ்விகி நிறுவனம் மூலமும் பெறலாம் என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், சோமோட்டோ, டன்சோ ஆகிய நிறுவனங்கள் மூலமாக ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் 7 முதல் 8 லட்சம் லிட்டா் பால் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பால் விற்பனையை மேலும் அதிகரிக்க ஸ்விகி நிறுவனத்துடனும் ஆவின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி ஸ்விகி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் மூலமும் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com