சென்னையில் 6 மருத்துவா்களுக்கு கரோனா

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் 6 மருத்துவா்கள் தனி வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் 6 மருத்துவா்கள் தனி வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வாா்டில் பணியாற்றிய 6 மருத்துவா்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவா்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பியுள்ளனா். முன்னதாக, அவா்கள் பணியாற்றிய வாா்டு, மாணவா் விடுதி ஆகியவை சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மூவருக்கும், ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்கள் இருவருக்கும், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அவா்கள் பணியாற்றிய வாா்டுகள் மூடப்பட்டதுடன், அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளா் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com