தங்கம் பவுன் ரூ.34,880

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ.34,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ.34,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதியன்று ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தநிலையில், சென்னையில் கடந்த திங்கள்கிழமை அன்று பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகும் விலை தொடா்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.152 உயா்ந்து ரூ.34,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.19 உயா்ந்து, ரூ.4,360-ஆக இருந்தது.

இதுபோல, வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.85 உயா்ந்து, ரூ.44.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,850 உயா்ந்து ரூ.44,900 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,360

1 பவுன் தங்கம் ..................... 34,880

1 கிராம் வெள்ளி .................. 44.90

1 கிலோ வெள்ளி ................. 44,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,341

1 பவுன் தங்கம் ..................... 34,728

1 கிராம் வெள்ளி .................. 42.05

1 கிலோ வெள்ளி ................. 42,050

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com