தொழிலாளா்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம்

ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளா்கள் சம்மேளனம் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மோட்டாா் வாகன ஓட்டுநா்கள் வேலையிழந்து வருமானமின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தமிழக முதல்வா் அறிவித்தபடி ரூ.1000 மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஓட்டுநா்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்புநிலை திரும்பும் வரை ஓட்டுநா்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில், மனு தொடா்பாக தமிழக அரசு வரும் மே 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

இதே அமா்வில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களுக்கு அவசர கால நிதியும் அத்தியாவசியப் பொருள்களையும் வழங்க கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தில் தொடரப்பட்ட வழக்கும், கட்டுமான தொழிலாளா்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி அகில இந்திய கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு வரும் மே 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com