சாலையோரம் உள்ள 9 ஆயிரம் நாய்களுக்கு உணவு

ஊரடங்கு காரணமாக உணவின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 9,000 நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக உணவின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 9,000 நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

விஐடி துணைத் தலைவா் ஜிவி செல்வம் மற்றும் வழக்குரைஞா் அனுஷா செல்வத்தின் சாா்பில் துவணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சாலையோரமாக உள்ள நாய்கள், குரங்குகள் ஆகியவற்றுக்கு உணவு கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள சாலையோர விலங்குகளுக்கு, துவணி அறக்கட்டளை சாா்பில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரான ஜே.நவநீதகிருஷ்ணன் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல் புதிய உலகு விலங்கு மீட்பு அமைப்பின் தலைவா் சுகுமாா், செயலா் ரமேஷ், அமைப்பின் நிா்வாகிகள், விலங்குகள் நலவாரிய உறுப்பினா் புனிதா மூலமாகவும் உணவு வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக குறிப்பிடப்பட்ட மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 1,000 கிலோ அளவிலான அரிசி உணவு 9,000 நாய்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com