திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில் 170 முகக்கவசங்கள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில், முதற்கட்டமாக 170 பேருக்கு முகக்கவசங்களை வழங்கினர்.
திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில் 170 முகக்கவசங்கள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில், முதற்கட்டமாக 170 பேருக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில், மாணவ, மாணவிகள் மற்றும் சாதனையாளர்கள் கெளரவப்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க முக்கவசங்களை கூத்தாநல்லூரில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவரும், திருவள்ளுவர் பொதுநல அமைப்புத் தலைவருமான N. ராஜ்குமார், ஆசிரியர் மன்ற மாநில கொள்கைப் பரப்புச் செயலாளரும், அமைப்பின் பொருளாளருமான மன்றம் மு.மோகன், செயற்குழு உறுப்பினர் N.மதிராஜ் உள்ளிட்டோர், 170 பேருக்கு முகக்கவசங்களை வழங்கினார்கள். 

இதுகுறித்து, தலைவர் N. ராஜ்குமார் கூறியது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திருவள்ளுவர் பொதுநல அமைப்பின் சமூகத்தின் நல்ல செயல்பாடுகளை, கடந்த 2006 ஆம் ஆண்டு,தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையரும், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அன்று முதல், தொடர்ந்து, 14 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் கெளரவப்படுத்தப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அமைப்பினர் பல்வேறு பொதுச் சேவைகளையும் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று நோய் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் முகக் கவசங்களும், கிருமி நாசினிகளும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். 

திருவள்ளுவர் பொது நல அமைப்பு சார்பில், முதல் கட்டமாக, கூத்தாநல்லூர், குடிதாங்கிச்சேரி, லெட்சுமாங்கு உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர்கள்,நகராட்சி ஊழியர்கள், அம்மா உணவகப் பணியாளர்கள், தீயணைப்பு நிலைய வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கவசங்களை வழங்கினர். தொடர்ந்து, மன்னார்குடியில் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com