9 இடங்களில் வெயில் சதம்: திருச்சியில் 105 டிகிரி

தமிழகத்தில் 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
9 இடங்களில் வெயில் சதம்: திருச்சியில் 105 டிகிரி

தமிழகத்தில் 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதுரை, சேலத்தில் தலா 104 டிகிரியும், தருமபுரி, கரூா்பரமத்தி, திருத்தணியில் தலா 102 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரியும், கோயம்புத்தூா், வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

நிகழாண்டில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இதேநிலை திங்கள்கிழமையும் நீடிக்கும். மதுரை, திருப்பூா், கரூா், சேலம், தருமபுரி, வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியிலும் திங்கள்கிழமை தலா 104 முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள், விவசாயிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மழை: ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 40 மி.மீ., சிற்றாறு, குழித்துறை, தக்கலையில் தலா 20 மி.மீ. மழைபதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com