உலிபுரம் ஊராட்சி முழுவதும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மாத்திரைகள் விநியோகம்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டது.

உலிபுரம் ஊராட்சி முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள 2400 குடும்பங்களுக்கும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமிபதி மருந்தும், மத்திய மற்றும் தமிழக அரசு சாப்பிட அறிவுறுத்திய ஆர்சினியம்ஆல்பம் 30 சி என்ற மருந்தை,தம்மம்பட்டியைச்சேர்ந்த  தன்னார்வலர்கள் குழு சார்பில், அதன் தலைவர் ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல், உலிபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,உலிபுரம் ஈச்சஓடைப்புதூர் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஹரிஆனந்த்,உதவியாசிரியர் வெர்ஜில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனையடுத்து உலிபுரம் ஊராட்சி முழுவதும் 2400 குடும்பங்களுக்கும் ஆர்சினியம் ஆல்பம்30சி மருந்துகுப்பிகள், தலைவர், துணைத் தலைவர் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்களால், விநியோகம் செய்யப்பட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com