இயல்புநிலைக்கு திரும்பும் கிருஷ்ணகிரி

கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கிறது.
இயல்புநிலைக்கு திரும்பும் கிருஷ்ணகிரி

கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கிறது. இத்தகைய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

அதன்படி வீட்டு உபயோக பொருட்கள் பெட்டிக்கடைகள் செல்போன் பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இத்தகைய நிலையில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூ விற்பனையில் பெண்கள் ஈடுபடுவதை காண முடிந்தது.

தள்ளுவண்டி கடைகளில் கூழ் விற்பனையும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. பொதுமக்கள் ஆங்காங்கே கூடிய தங்களது தேவைகளை நிறைவு செய்கின்றனர். தேநீர் கடைகள் அவ்வளவாக திறக்கப்படவில்லை. நகைக்கடைகள், துணிக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. 

பொதுவாகவே அரசின் உத்தரவுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com