மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத் திருத்தத்தை உருவாக்க முயற்சிக்கலாம்

மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத் திருத்தத்தை உருவாக்க முயற்சிக்கலாம்

மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின், வரைவு மின்சார சட்டத் திருத்தம் பொது மக்களுக்கும்,

விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அதாவது இந்த புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநில அரசின் உரிமைகள் உள்ளிட்டவை பறிபோகுமோ என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. குறிப்பாக இந்த வரைவு மின்சார சட்டத் திருத்தம் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் தராது என்பதால் மத்திய அரசு, இம்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசும் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே மாநில அரசின் கோரிக்கையை ஏற்றும், மின்சாரம் தொடா்பாக மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், ஏற்கெனவே பொது மக்களும், விவசாயிகளும் எப்படி பயனடைந்தாா்களோ அது தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மேலும், மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப, மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கலாம் என ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com