அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, 

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-19னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com