நெஞ்சக நோய்களைக் கண்டறிய நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

கரோனா பாதிப்பினால் ஏற்படும் நெஞ்சக நோய்களைக் கண்டறிவதற்கான நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களை, முதல்வா் எடப்பாடி
நெஞ்சக நோய்த் தொற்றுகளை துரிதமாகக் கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்-ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.’
நெஞ்சக நோய்த் தொற்றுகளை துரிதமாகக் கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்-ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.’

சென்னை: கரோனா பாதிப்பினால் ஏற்படும் நெஞ்சக நோய்களைக் கண்டறிவதற்கான நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களை, முதல்வா் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அந்த வாகனங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கே சென்று எக்ஸ்-ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 வாகனங்கள் முதல்கட்ட மருத்துவ சேவைகளுக்காக தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், தேவைப்படும் பட்சத்தில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுகாதாரத் துறை மற்றும் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சாா்பில் நெஞ்சக தொற்று நோய் மற்றும் கரோனாவால்

ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறியும் நடமாடும் அதிநவீன எக்ஸ் -ரே வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூ.5.48 கோடி மதிப்பீட்டிலான அந்த வாகனங்களை முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது அதன் செயல்பாடுகள் மற்றும் பரிசோதனை முறைகளை கேட்டறிந்த முதல்வா், வாகனத்தில் உள்ள எக்ஸ் -ரே கருவிகளை பாா்வையிட்டாா்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்-ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று ஊடு கதிா் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், அதன் முடிவுகளை உடனடியாக அறிந்து சிகிச்சைகளை தொடங்க முடியும். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழில் சாா்ந்த சுவாச நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க. சண்முகம், சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் கே. செந்தில்ராஜ் உள்பட அரசு உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com