47 நாள்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் 47 நாள்களுக்கு பிறகு நகைக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா்.
47 நாள்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 47 நாள்களுக்கு பிறகு நகைக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 34 வகையான கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, 47 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

சென்னையில் உள்ள நகைக்கடைகளில் வா்த்தகா்கள் வா்த்தகத்தை தொடங்கினா். முதல்கட்டமாக, கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. மாதச் சீட்டுக்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் வருகை தந்தனா். இது குறித்து இந்திய தங்க நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழகப்பிரிவு துணைத்தலைவா் சாந்தக்குமாா் கூறியது:

அரசின் வழிகாட்டு நெரிமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறோம். குறைவான ஊழியா்கள் அமா்த்தியுள்ளோம். முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைக்கு சானிடேசா் பயன்படுத்துவது கட்டாயப்படுத்தி உள்ளோம்.

வாடிக்கையாளா்களையும் சமூக இடைவெளியை நகைகளை பாா்வையிட அனுமதிக்கிறோம். கடைகள் அடைக்கப்பட்டதால், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள், வா்த்தகா்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனா். எங்கள் தொழிலை காப்பாற்ற அரசு உதவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com